மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் 
தமிழ்நாடு

வேறு மாநிலங்களில் தேர்வு மையம்: ரயில்வே வாரியத்தின் பதில் ஏற்புடையதல்ல! - சு. வெங்கடேசன்

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளது பற்றி மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பதிவு

DIN

தமிழ்நாட்டு மாணவர்களுக்கு வேறு மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு ரயில்வே வாரியம் அளித்த பதில் ஏற்புடையதல்ல என்று மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

"ரயில்வே தேர்வுக்கு தமிழ்நாட்டு மாணவர்களுக்கு 1,500 கிமீ அப்பால் தேர்வு மையம்.

இந்தியாவிலேயே அதிகமான உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6,000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என ரயில்வே வாரியம் சொல்லியுள்ள பதில் ஏற்புடையதல்ல.

தேர்வுக்கு மையங்களை கண்டறிய வழியற்ற மத்திய அரசு மும்மொழித் திட்டத்துக்கு மூச்சுமுட்டக் கத்துகிறது.

ரயில்வே தேர்வு வாரியத்தின் தலைவர் பிரதிபா யாதவ், நான் ரயில்வே சிபிடி 2(CBT 2) தேர்வு மையங்கள் வெளிமாநிலத்தில் போடப்பட்டு இருப்பது பற்றிய எனது கடிதத்திற்கு பதில் அளித்துள்ளார்.

ஒரே அமர்வில் எல்லா தேர்வர்களுக்கும் தேர்வு நடத்தப்பட வேண்டியுள்ளதாலும், அதே தேதியில் ரயில்வே தேர்வு வாரியத்தின் வேறு ஒரு தேர்வை நடத்தி வேண்டி இருப்பதாலும் சிபிடி 2 தேர்வர்கள் அனைவரையும் தமிழ்நாட்டு மையங்களில் மட்டும் பொருத்த முடியவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார்.

இந்தியாவிலேயே அதிகமான பொறியியல் கல்லூரிகள், உயர் கல்வி நிறுவனங்கள் நிறைந்த தமிழ்நாட்டில் 6,000 பேருக்கு மையம் கண்டுபிடிக்க முடியவில்லை என்பதோ, ஒரு தேதி சரிப்பட்டு வராவிட்டால் இன்னொரு தேதியை தேட முடியாது என்பதோ சமாதானம் செய்யும் பதில்களா?

இப்படி தமிழ்நாடு தேர்வர்கள் வெளிமாநிலங்களுக்கு பந்தாடப்படுவதை மத்திய அரசின் தேர்வு முகமைகள் தொடர்ந்து செய்து வருவதை நானே எத்தனையோ முறை எழுப்பியுள்ளேன்!

உண்மையான அக்கறை இருந்தால் எளிதில் தீர்வுகாணப்பட வேண்டிய ஒரு செயலை அக்கறை இன்றி அணுகி ஆயிரக்கணக்கான மாணவர்களை வெளி மாநிலங்களுக்கு அலைக்கழிப்பது ஏற்புடையதல்ல" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT