ராமேசுவரம் மீனவர்கள்.  
தமிழ்நாடு

கச்சத்தீவு திருவிழா நிறைவு: மீன்பிடிக்க கடலுக்கு சென்ற ராமேசுவரம் மீனவர்கள்

கச்சத்தீவு திருவிழாவையொட்டி விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடை நீக்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.

DIN

கச்சத்தீவு திருவிழாவையொட்டி விதிக்கப்பட்டிருந்த மீன்பிடி தடை நீக்கப்பட்டதால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்றனர்.

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா 14,15 ஆகிய இரண்டு நாள்கள் நடைபெற்றது.

இதில், கலந்துகொள்ள ராமேசுவரத்தில் இருந்து 100 படகுகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் செல்லுவதால் பாதுகாப்பு காரணத்திற்காக ராமேசுவரத்தில் இருந்து விசைப்படகுகள் மற்றும் நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்பட்டன.

போப்பின் புதிய புகைப்படத்தை வெளியிட்டது வாடிகன்

இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் 1,500 க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மற்றும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை.

கச்சத்தீவு திருவிழா நிறைவடைந்த நிலையில் மீன்பிடிக்க செல்ல விதிக்கப்பட்ட தடையை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை நீக்கியது.

இதனைத்தொடர்ந்து, ராமேசுவரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் திங்கள்கிழமை காலையில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

SCROLL FOR NEXT