உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வந்த பக்தர் திடீரென மயங்கி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் பெரிய கோயிலை தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், பெரிய கோயிலிலைக் கண்டு ரசிப்பதற்காக ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி (68) என்பவர் தனது குடும்பத்துடன் இன்று(மார்ச் 18) மாலை சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார்.
இதையும் படிக்க: கருவுற்றிருந்த யானை இறைச்சிக்காக கொலை?
சாமி தரிசனத்தை முடித்துவிட்டு சுந்தரமூர்த்தி வெளியே வரும்போது, திடீரென நெஞ்சுவலிப்பதாகக் கூறி மயங்கி விழுந்துள்ளார்.
உடனடியாக அவரது குடும்பத்தினர் 108 ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலின் பேரில் அங்கு வந்த மருத்துவர்கள் அவரை பரிசோதித்தபோது, அவர் நிகழ்விடத்திலேயே பலியானதாக தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து சுந்தரமூர்த்தியின் குடும்பத்தினர், அவரது உடலை சொந்த ஊருக்கு வேறு, ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் சென்றனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.