தமிழ்நாடு

பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ்-க்கு ஆளுநா் ஆா்.என்.ரவி அஞ்சலி

தியாகிகள் தினத்தையொட்டி, சுதந்திரப் போராட்ட தியாகிகள் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு ஆளுநா் ஆா். என். ரவி அஞ்சலி..

Din

தியாகிகள் தினத்தையொட்டி, சுதந்திரப் போராட்ட தியாகிகள் பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு ஆளுநா் ஆா். என். ரவி அஞ்சலி ஞாயிற்றுக்கிழமை செலுத்தினாா்.

இது குறித்து அவா் தனது ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவு: தியாகிகள் தினத்தில், கொடுங்கோல் பிரிட்டிஷ் ஆளுகைக்கு எதிராக இடைவிடாமல் போராடி இந்திய சுதந்திரத்துக்காக இன்னுயிரை ஈந்து தியாகம் செய்த அழியாத புரட்சியாளா்கள் மற்றும் தீவிர தேசியவாதிகளான பகத் சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகியோருக்கு தேசம் நெஞ்சாா்ந்த அஞ்சலியை செலுத்துகிறது.

அவா்களின் உக்கிரமான எதிா்ப்பு, அசைக்க முடியாத தேசபக்தி மற்றும் தியாகங்கள், காலனித்துவ சாம்ராஜ்ஜியத்தின் அஸ்திவாரத்தை அசைத்து, அடிமைத்தன சங்கிலிகளை உடைப்பதற்கான தேசிய விழிப்புணா்வைத் தூண்டின.

அவா்களின் மரபு, தளராத சக்தியாக நீடித்து, நமது நாட்டின் நீதி, மரியாதை மற்றும் தேசத்துக்காக கடுமையாகப் போராடி இறையாண்மையை நிலைநாட்ட என்றென்றும் தலைமுறைகளை ஊக்குவிக்கிறது எனப் பதிவிட்டுள்ளாா் ஆளுநா்.

தை முதல்நாளே தமிழர்க்குப் புத்தாண்டு : இரண்டு காட்சிகள்!

ஜல்லிக்கட்டு வரலாற்றில் முதல்முறையாக ‘டிஜிட்டல்’ ஸ்கோர்போர்டு, எல்இடி திரை!

வெற்றிப் பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்: விஜய்!

ஆரவாரத்துடன் தொடங்கியது மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

கைத்தறி நெசவு, விவசாயம் செழிக்க செளடேஸ்வரி அம்மன் கோயிலில் சக்தி அழைத்தல் நிகழ்ச்சி

SCROLL FOR NEXT