தமிழ்நாடு

எதிர்க்கட்சி முதல்வர்கள் மக்களை திசைதிருப்பலாமா? -தமிழிசை சௌந்தரராஜன்

“நியாயமான தொகுதி மறுசீரமைப்பு குறித்த ஆலோசனைக் கூட்டம்: மக்களை திசைதிருப்பும் முயற்சி”

DIN

சென்னை: சென்னையில் தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் தலைமையில் சனிக்கிழமை(மார்ச் 22) நடைபெற்ற ’நியாயமான தொகுதி மறுசீரமைப்பு’ குறித்து விவாதிக்க உருவாக்கப்பட்டுள்ள கூட்டுக்குழுவின் முதலாவது ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு மாநில தலைவர்களும் கலந்துகொண்டனர்.

தேசிய அளவில் கவனத்தை ஈர்த்துள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்தக்கட்டமாக, கூட்டுக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.

இந்த நிலையில், ’நியாயமான தொகுதி மறுசீரமைப்பு’ குறித்த ஆலோசனைக் கூட்டமானது மக்களை திசைதிருப்பும் முயற்சி என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: “தொகுதிகளின் எண்ணிக்கை குறைக்கப்படாது என்பது தேர்தல் ஆணையத்தின் இணையதளப் பக்கத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படியிருக்கும்போது, எதற்காக அவர்கள் ஆலோசனைக் கூட்டத்தை ஏற்பாடு செய்ய வேண்டும்?

அவர்கள்(திமுக) தமிழ்நாட்டு மக்களை திசைதிருப்புகிறார்கள். இங்கு(சென்னை) வருகை தந்திருந்த பிற முதல்வர்களும் தாங்கள் சார்ந்துள்ள மாநில மக்களை திசைதிருப்புகிறார்கள்.

அதேபோல, புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள தேசிய கல்விக் கொள்கையின் முக்கியத்துவத்தை நாங்கள்(பாஜக) எடுத்துச்சொல்ல விழைகிறோம்.இந்த விவகாரத்தில் அவர்கள் தமிழ்நாட்டு மக்களை திசைதிருப்புகிறார்கள்.

தேசிய கல்விக் கொள்கையில், மும்மொழி கொள்கை என்பது மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது (ஹிந்தி என்று குறிப்பிடப்படவில்லை).

ஆகவே, மக்களிடம் திமுகவால் எழுப்பப்பட்டுள்ள ஐயங்களைக் களைய நாங்கள் விழைகிறோம்” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT