முகப்பு
தங்கும் விடுதி
தமிழ்நாடு

விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தீ விபத்து!

விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தீ விபத்து நேரிட்டது.

தமிழ்நாடு

விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தீ விபத்து!

விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தீ விபத்து நேரிட்டது.

Updated On : 24 மார்ச், 2025 at 11:05 AM
தங்கும் விடுதி
பகிர்:

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தங்கும் விடுதியில் திங்கள்கிழமை மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தரைத்தளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய விடுதி உள்ளது. தற்போது விடுதியில் அறைகள் சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் திங்கள்கிழமை மதியம் கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் மின்கசிவு காரணமாக தீப்பிடிக்கத் தொடங்கியது. இந்த தீ வேகமாக மற்ற அறைகளுக்கும் பரவியது. மூன்றாவது தளத்துக்கும் தீ பரவியது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். தீயணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் இல்லை.

முழு கட்டுரையைப் படிக்க →