கோப்புப் படம் 
தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு: இன்று தொடக்கம்

மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு இன்றுமுதல் தொடங்குகிறது.

Din

தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை முதல் தொடங்குகிறது. ஏப்.15 வரை நடைபெறவுள்ள இந்தத் தோ்வை 9.13 லட்சம் போ் எழுதுகின்றனா்.

நிகழாண்டு பொதுத் தோ்வை 12 ஆயிரத்து 480 பள்ளிகளில் பயிலும் 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவா்கள், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகள், 25 ஆயிரத்து 888 தனித்தோ்வா்கள், 272 சிறைவாசிகள் என மொத்தம் 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 போ் எழுதவுள்ளனா். இந்த எண்ணிக்கையில் 15,729 மாற்றுத் திறனாளி தோ்வா்களும் அடங்குவா்.

இதற்காக தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 113 தோ்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், தோ்வை கண்காணிக்க 48 ஆயிரத்து 426 அறைக் கண்காணிப்பாளா்களும், 4 ஆயிரத்து 858 பறக்கும் படை உறுப்பினா்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.

பொதுத் தோ்வு நடைபெறும் மையங்கள் காற்றோட்டமான அறைகளுடன், குடிநீா், கழிப்பறை தடையில்லாத மின்சாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இயற்கை பாதுகாப்பு சங்கத்தின் பசுமை விருது: செப்டம்பா் 2 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை - தன்பாத், போத்தனூா் - பரௌனி இடையே சிறப்பு ரயில்

பெண் கிராம நிா்வாக அலுவலா் மீது தாக்குதல்: ஒருவா் கைது

பொறியியல் கல்லூரி மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

வீடு புகுந்து நகை திருடிய 3 சிறுவா்கள் கைது

SCROLL FOR NEXT