தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி ஜிப்லி அனிமேஷன் பாணியிலான தனது புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
ஜப்பானைச் சேர்ந்த பிரபல அனிமேஷன் திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ஜிப்லி ஸ்டுடியோஸ். இவர்கள் தயாரித்த திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.
ஜிப்லி நிறுவனம் தயாரித்த அனைத்துப் படங்களும் எல்லா வயதினராலும் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகின்றன.
ஜிப்லி ஸ்டுடியோவின் நிறுவனர்களில் ஒருவரான ஹயாவோ மியாசாகி இரு அனிமேஷன் திரைப்படங்களுக்கு ஆஸ்கர் விருதுகளை வென்றுள்ளார்.
இந்த நிலையில், கடந்த வாரம் முழுவதும் ஜிப்லி அனிமேஷன் பாணியிலான பிரபலங்களின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களை நிறைத்திருந்தன.
காரணம் என்னவென்றால், சாட் ஜிபிடி போன்ற ஏஐ தளங்களில் நாம் நமது புகைப்படங்களைப் பதிவேற்றி ஜிப்லி அனிமேஷன் போன்று தயாரித்துத் தருமாறு கோரிக்கை வைத்தால், ஏஐ அதே பாணியிலான புகைப்படங்களைத் தயாரித்து கொடுத்துவிடும்.
இது உலகம் முழுவதும் வைரலாகி பிரபலங்கள் உள்பட பலரும் தங்களது புகைப்படங்களை அவ்வாறு பதிவேற்றினர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஜிப்லி பாணியிலான தனது புகைப்படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
தனது மறக்கமுடியாத சில தருணங்களை ஜிப்லி பாணியில் உருவாக்கியதாகத் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி பதிவிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.