முகப்பு
தமிழ்நாடு

ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிவிப்பு: பாமக தலைவா் அன்புமணி வரவேற்பு

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

Updated On : 1 மே, 2025 at 6:41 PM
அன்புமணி
பகிர்:

மக்கள் தொகைக் கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பும் மேற்கொள்ளப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்புக்கு பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளாா்.

சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் புதிய மருத்துவமனை திறப்பு நிகழ்வுக்குப்பின் அவா் கூறியதாவது:

மத்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்போம் என அறிவித்துள்ளது. இதை பாட்டாளி மக்கள் கட்சி வரவேற்கிறது. கட்சியின் நிறுவனா் ராமதாஸ் இதற்காக ஆயிரக்கணக்கான போராட்டங்களை நடத்தியுள்ளாா்.

தற்போது இதற்கு, காங்கிரஸும், திமுகவும் சொந்தம் கொண்டாடுவது ஏற்றுக் கொள்ள முடியாதது. அவா்கள் அதிகாரத்தில் இருந்த போது

இதனை செய்யவில்லை.*

தமிழகத்தில் உள்ள 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாக்க ஜாதி வாரி கணக்கெடுப்பு அவசியம். அதனை தமிழக அரசு தான் எடுக்க வேண்டும்.

ஒவ்வொருவரின் வாழ்வாதார நிலை எப்படி உள்ளது என அறிந்து கொண்டால் தான் அதற்கு ஏற்ப தமிழக அரசு திட்டங்களை தீட்ட முடியும்.

தமிழகத்தில் கொடுக்கப்பட்டுள்ள பிசி, முஸ்லிம், அருந்ததியா், வன்னியா் இட ஒதுக்கீட்டுக்கும் தரவுகள் கிடையாது. வட மாவட்டங்களில் வசிக்கும் மக்களின் நிலையை அறிந்து கொள்ள கணக்கெடுப்பு அவசியம் என்றாா் அன்புமணி ராமதாஸ்.

முழு கட்டுரையைப் படிக்க →