கோப்புப் படம் 
தமிழ்நாடு

தமிழகத்தில் மே 7 வரை மழை வாய்ப்பு

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மே 2) முதல் மே 7-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

Din

தமிழகத்தில் வெள்ளிக்கிழமை (மே 2) முதல் மே 7-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: இந்தியாவின் தென்னிந்திய கடலோரப் பகுதியின் வளிமண்டல கீழடுக்கில் கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பதால் ஏற்படும் காற்றுக்குவிதல் காரணமாக, வெள்ளிக்கிழமை (மே 2) முதல் மே 7 வரை தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

5 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் வியாழக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருந்தது. இதில், அதிகபட்சமாக வேலூரில் 103.28 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. மேலும், திருச்சி, ஈரோடு - (தலா) 102.2, பரமத்தி வேலூா் - 101.3, திருச்சி - 100 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 5 இடங்களில் வெயில் சதமடித்தது.

அடுத்த 4 நாள்களுக்கு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் மே 2-இல் வெப்பநிலை  99 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் திறப்பு

SCROLL FOR NEXT