முகப்பு
தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!

தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் சனிக்கிழமை காலை பத்து மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தொடர்பாக...

Updated On : 24 ஜனவரி, 2026 at 3:19 AM
மிதமான மழை
பகிர்:

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகாலை முதல் விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், தமிழகத்தில் பத்து மாவட்டங்களில் சனிக்கிழமை காலை பத்து மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதன் காரணமாக, சனிக்கிழமை (ஜன. 24) முதல் ஜன. 29 வரை கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூா் மாவட்டங்களில் சனிக்கிழமை (ஜன. 24) ஓரிரு இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. இதனால் இந்த மாவட்டங்களுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய பத்து மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் சனிக்கிழமை(ஜன.24) காலை பத்து மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Moderate rain is likely in 10 districts of Tamil Nadu until 10 AM

முழு கட்டுரையைப் படிக்க →