எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் தொடக்க விழாவில் நிறுவனர் பாரிவேந்தர் உள்ளிட்டோர்... DIN
தமிழ்நாடு

எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனை தொடக்க விழா!

சென்னை ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் தொடக்க விழா பற்றி...

DIN

சென்னை ராமாபுரத்தில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் பல்நோக்கு மருத்துவமனையான எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் தொடக்க விழா நடைபெற்றது.

கல்வி மற்றும் மருத்துவத்தில் பெயர்பெற்ற எஸ்.ஆர்.எம். குழுமம், மேம்பட்ட மருத்துவ சிகிச்சை அளிக்கும் பொருட்டு, சென்னை ராமாபுரம் பகுதியில் ஒரு புதிய பல்நோக்கு மருத்துவமனையை அமைத்துள்ளது.

300-க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகள், 75-க்கும் மேற்பட்ட அதிநவீன சிறப்பு படுக்கைகள், 7 மேம்பட்ட மாடுலர் அறுவை சிகிச்சை அரங்குகள், சமூகத்தில் உள்ள அனைத்துப் பிரிவு மக்களுக்கும் ஏற்ற 30-க்கும் மேற்பட்ட சிறப்பு சிகிச்சைகள், டிஜிட்டல் எக்ஸ்-ரே, செய்யறிவு மூலம் இயங்கும் சிடி ஸ்கேன், மேம்பட்ட 3டி எம்ஆர்ஐ, இன்டர்வென்ஷனல் ரேடியாலஜி மற்றும் முழுமையான, விரிவான ஆய்வக வசதிகளைக் கொண்டுள்ளது.

இந்த எஸ்.ஆர்.எம். பிரைம் மருத்துவமனையின் தொடக்க விழா கடந்த ஏப். 30(புதன்கிழமை) அன்று நடைபெற்றது.

மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஆர். சிவகுமார், துணைத் தலைவர் கீதா சிவகுமார் மற்றும் இணைத் தலைவர் எஸ். சிவராஜன் ஆகியோர் முன்னிலையில் எஸ்.ஆர்.எம். குழுமத்தின் நிறுவனரான டாக்டர் பாரிவேந்தர் மருத்துவமனையை திறந்து வைத்தார்.

எஸ்.ஆர்.எம். பிரைம் பல்நோக்கு மருத்துவமனை, உயர்தர மருத்துவ சேவைகளை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக விளங்கும் என்று எஸ்.ஆர்.எம். நிறுவனர் பாரிவேந்தர் தெரிவித்தார்.

இந்த விழாவில் எஸ்.ஆர்.எம். குழுமத்தைச் சேர்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமூக வலைதளங்களில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

லிவர்பூல் கால்பந்து அணியின் வரலாற்றில் முதல்முறை... சாதனையுடன் முன்னேற்றம்!

Fake Dating! | சமூக வலைதளத்தில் வலை விரிக்கும் பெண்கள்! புதிய மோசடி அம்பலம்!

ஜம்மு - காஷ்மீரில் நிலச்சரிவு: 5 பேர் பலி; 14 பேர் படுகாயம்

கேரளத்தில் அமீபா தொற்றால் மூளை பாதிப்பு: நோயாளிகள் எண்ணிக்கை 18-ஆக உயர்வு!

SCROLL FOR NEXT