தமிழ்நாடு

பாஜக அரசுக்கு கண்டனம்! திமுக செயற்குழு தீர்மானங்கள்!

திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றம்

DIN

திமுக மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

சென்னை திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று(சனிக்கிழமை) நடைபெற்றது.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

செயலாளர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

  • பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் மற்றும் மறைந்த முன்னாள் கத்தோலிக்க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.

  • நாட்டின் முதல்வர்களில் முன்னோடியாக விளங்கும் தமிழக முதல்வருக்கு பாராட்டு

  • திமுக அரசின் நான்காண்டு சாதனைகளை விளக்கும் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.

  • மதுரை மாநகரில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தப்படும்.

  • அமலாக்கத் துறையை அரசியல் பழிவாங்கலுக்கு பயன்படுத்தும் பாஜக அரசுக்கு கண்டனம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழடி அருங்காட்சியகத்தை பிரதமர் பார்வையிட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின் அழைப்பு!

பெண் மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ! 8 பேர் காயம்! | Selam

தென்னாப்பிரிக்காவில் மதுபான விடுதியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் பலி, 10 பேர் காயம்

”தமிழ் மீதும் தமிழர் மீதும் மத்திய அரசுக்கு வெறுப்பு!”: முதல்வர் மு.க.ஸ்டாலின்

உருவ கேலிக்கு உள்ளான ஸ்மிருதி மந்தனாவின் புதிய புகைப்படங்கள்!

SCROLL FOR NEXT