நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் தொடங்கியது.
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு ‘நீட்’ தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது.
2025-26-ஆம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ தோ்வு ஞாயிற்றுக்கிழமை (மே 4) பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது.
தமிழகத்தில் 1.50 லட்சம் பேர் உள்பட மொத்தம் 23 லட்சம் பேர் நீட் நுழைவுத்தேர்வை எழுதுகின்றனர். மேலும் தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் ‘நீட்’ தோ்வு நடைபெறுகிறது.
சென்னையில் மட்டும் 44 மையங்களில் 21,960 போ் தோ்வு எழுதுகின்றனா்.
இத்தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.