கருமேகங்கள் சூழ்ந்த நகரப் பகுதி கோப்புப் படம்
தமிழ்நாடு

சென்னை, புறநகர்ப் பகுதிகளில் மழை!

சென்னை புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

DIN

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

சென்னையில் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சாரல் மழை பெய்து வருகிறது.

நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், புறநகர்ப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.

சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, வடபழனி, வளசரவாக்கம், போரூர், மதுரவாயல், கோயம்பேடு, அமைந்தகரை, அரும்பாக்கம், அண்ணா நகர், முகப்பேர் உள்ளிட்டப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

மேலும், வடசென்னைக்குட்பட்ட எழும்பூர், வேப்பேரி, காசிமேடு, சென்ட்ரல், தண்டையார்பேட்டை, பாரிமுனை, ராயபுரம், திருவொற்றியூர், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்கிறது.

இதேபோன்று சென்னை புறநகர்ப் பகுதிகளான ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயல், கும்மிடிப்பூண்டி, செங்குன்றம், பூவிருந்தவல்லி உள்ளிட்டப் பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

கோயம்புத்தூர், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் குறிப்பிட்டிருந்தது.

இதையும் படிக்க | அடுத்த 3 மணிநேரத்துக்கு 15 மாவட்டங்களில் மழை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விக்கிரவாண்டி அருகே ஆம்னி பேருந்து விபத்து! 40 பேர் காயம்

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

SCROLL FOR NEXT