சீர்காழி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பெய்த மழையால் மின்விநியோகம் தடை செய்யப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, கொள்ளிடம், பூம்புகார் சுற்றுவட்டார பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்தது. இந்நிலையில் இரவு 8 மணி அளவில் மேகமூட்டத்துடன் குளிர்ந்த காற்று விசத்தொடங்கியது.
தொடர்ந்து பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.
இரண்டு மணி நேரத்திற்கு மேலாக பலத்த காற்றுடன் கனமழை பெய்ததால் சீர்காழி கொள்ளிடம் சுற்றுவட்டார பகுதிகளில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின்சாரம் தடை செய்யப்பட்டது. கடந்த 12 மணி நேரமாக மின் விநியோகம் இல்லாமல் மக்கள் அவதியுற்றனர்.
மரங்கள், கிளைகளை அகற்றி மின் கம்பிகளை சீரமைத்து மீண்டும் மின் விநியோகம் வழங்கிட இரவு முழுவதும் மின்வாரிய ஊழியர்கள் தீவிர களப்பணியில் ஈடுபட்டனர்.
மேலும் பலத்த காற்றுடன் பெய்த மழை காரணமாக சாலைகளில் மழைநீர் தேங்கியதுடன் பல்வேறு பகுதிகளில் மரங்களும் சாலைகளின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் மரக்கிளைகள் மின்கம்பிகளில் விழுந்தும் சேதம் ஏற்பட்டுள்ளது.
நகரில் பல வர்த்தக நிறுவனங்களின் பெயர் பதாகைகள் காற்றில் சாலையில் தூக்கி வீசப்பட்டது.
இரவில் மழையின் தாக்கம் குறைந்து காற்று மற்றும் இடி மின்னலுடன் பரவலாக சாரல் மழை தொடர்ந்தது. இன்று காலை வரை சீர்காழியில் 84.60 மில்லி மீட்டர் மழையும், கொள்ளிடத்தில் 60.60 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.