சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத்.. 
தமிழ்நாடு

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார்!

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் காலமானார்.

DIN

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்திய நாராயண பிரசாத் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு 11.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 56.

சத்திய நாராயண பிரசாத் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2021 ஆம் ஆண்டில் அக்டோபர் மாதம் சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். அதன் பின்னர் மார்ச் 2023-ல் நிரந்தரமாக நியமிக்கப்பட்டார்.

தற்போது உயர் நீதிமன்றத்தில் பணியாற்றும் 63 நீதிபதிகளில் பணி அனுபவ வரிசையில் அவர் 42-வது இடத்தில் இருந்தார். சத்திய நாராயண பிரசாத் பதவி உயர்வு பெறுவதற்கு முன்னதாக, 1997 ஆம் ஆண்டிலிருந்து 24 ஆண்டுகள் வழக்குரைஞராகப் பயிற்சி பெற்றுள்ளார்.

தஞ்சாவூரில் பிறந்தவரான சத்திய நாராயண பிரசாத், உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெறுவதற்கு முன்பு, பிஎஸ்என்எல், சென்னை துறைமுக அறக்கட்டளை, இந்தியன் வங்கி, தெற்கு ரயில்வே உள்ளிட்ட பல்வேறு அரசு அமைப்புகளுக்கான ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நாளை (டிச.21) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

எஸ்ஐஆர் எதற்காக..? - பிரதமர் மோடி விளக்கம்!

எம்.எஸ்.தோனி, ரிஷப் பந்த் வரிசையில் சாதனைப் பட்டியலில் இணைந்த சஞ்சு சாம்சன்!

வலிகளைச் சிரிப்பில் காட்டிய அன்புள்ளம்... ஸ்ரீனிவாசனுக்கு மோகன்லால் இரங்கல்!

கொல்லப்பட்ட வங்கதேச மாணவர் இயக்கத் தலைவரின் உடல் நல்லடக்கம்! லட்சக்கணக்கான மக்கள் பிரியாவிடை!

SCROLL FOR NEXT