முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

பெற்றோர்கள் நண்பனாகத் துணைநில்லுங்கள்: முதல்வர் ஸ்டாலின்

பிளஸ் 2 முடிவுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் பதிவு...

DIN

நேர்மறையான கண்ணோட்டத்துடன் தேர்வு முடிவுகளை அணுக வேண்டும் என்று மாணவர்கள், பெற்றோர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழக பாடத்திட்டத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இன்று காலை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில், மாணவர்கள், பெற்றோர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார்.

அவர் தெரிவித்திருப்பதாவது:

“தேர்வு முடிவுகள் எதுவானாலும் அதுவே முடிவல்ல என்பதை மாணவர்களும், பெற்றோர்களும் உணர வேண்டும். தேர்ச்சி பெறாதவர்கள், எதிர்பார்த்த மதிப்பெண் கிடைக்காதவர்களுக்கு இன்னும் பல வாய்ப்புகளைக் காலம் வழங்கத்தான் போகிறது.

இது உங்கள் வாழ்வின் தொடக்கம் மட்டுமே. இனிதான் உங்களின் சிறப்பான தருணங்கள் அமையவுள்ளது என்ற நேர்மறையான கண்ணோட்டத்துடன் இந்தத் தேர்வு முடிவுகளை அணுகுங்கள்.

பெற்றோர்களும் பிள்ளைகள் மீது எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாமல், அவர்களது அடுத்தகட்ட வளர்ச்சிக்கு ஒரு நல்ல நண்பனாகத் துணைநில்லுங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு - பாஜகதான் காரணம்! அகிலேஷ் யாதவ் கடும் தாக்கு!

5 காவல்துறை பணியாளர்களுக்கு காந்தியடிகள் காவலர் விருது: தமிழக அரசு அறிவிப்பு

எனக்கு 62; உனக்கு 37! டாம் க்ரூஸுக்கு விண்வெளியில் 4-வது திருமணம்?

இந்தியா-பாக். போட்டியை கண்டு ரசித்த தேசத் துரோகிகள்– உத்தவ் தாக்கரே

10 ஆண்டுகளில் மாணவர் தற்கொலைகள் 65% அதிகரிப்பு! ஏன்?

SCROLL FOR NEXT