ஓபிஎஸ் செய்தியாளர் சந்திப்பு. 
தமிழ்நாடு

அமித் ஷா அழைக்காதது வருத்தமே: ஓபிஎஸ்

மத்திய அமைச்சர் அமித் ஷா அழைக்காதது குறித்து ஓபிஎஸ் பேச்சு...

DIN

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் இன்று((மே 15) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எங்களை அழைக்காதது வருத்தமே. நாங்கள் இதுவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறோம். யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் எங்களது நிலைபாட்டை தெரிவித்துவிட்டோம்.

மாவட்டம் வாரியாக ஆய்வு செய்து தேர்தல் கூட்டணிக் குறித்து விரைவில் அறிவிப்போம். கூட்டணி தொடர்பாக யாருடனும் மறைமுகமாக பேசவில்லை.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் வழங்கப்பட்டது தற்காலிகமானதே. தவெக தலைவர் விஜய் நல்ல இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறார்.

முன்னாள் அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “எங்களை இணைக்காமல் அதிமுக வெற்றிப் பெற முடியாது” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: பாஜகவுடன் கூட்டணி கிடையாது: தவெக

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

24,426 புள்ளிகளாக சரிந்த நிஃப்டி; சென்செக்ஸ் 80,000 புள்ளிகளுக்குக் கீழே நிறைவு!

கூலி படத்தை முந்துமா? மதராஸி தணிக்கைச் சான்றிதழ் வெளியீடு!

ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!

ஏமாற்றிவிட்டார் மாதம்பட்டி ரங்கராஜ்: ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா பரபரப்பு புகார்

ஆற்றில் வீசப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் மனுக்கள்- எடப்பாடி பழனிசாமி கண்டனம்

SCROLL FOR NEXT