மெட்ரோ (கோப்புப்படம்)
தமிழ்நாடு

மெட்ரோ ரயிலில் வாட்ஸ்ஆப் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை முடங்கியது!

மெட்ரோ ரயில் பயணிகள் வாட்ஸ்ஆப் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை பல மணி நேரம் முடங்கியதால் பயணிகள் கடும் அவதி.

Din

மெட்ரோ ரயில் பயணிகள் வாட்ஸ்ஆப் செயலி மூலம் டிக்கெட் எடுக்கும் சேவை பல மணி நேரம் முடங்கியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

சென்னையில் மெட்ரோ ரயில் பயணிகளின் வசதிக்காக வரிசையில் நின்று காகித டிக்கெட் எடுப்பதற்குப் பதிலாக, க்யூ-ஆா் குறியீடு, வாட்ஸ்ஆப் செயலி உள்ளிட்ட வசதிகள்மூலம் டிக்கெட் எடுக்கும் வசதி நடைமுறையில் இருந்து வருகிறது. இதனால், பயணிகள் காத்திருக்காமல், தங்கள் கைப்பேசிகள் மூலமாகவே டிக்கெட் எடுத்து எளிதாக தங்கள் பயணத்தை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த நடைமுறை மெட்ரோ ரயில் பயணிகளிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், வியாழக்கிழமை காலையில் இந்த நடைமுறையில் திடீரென ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் டிக்கெட் எடுப்பதற்கான வாட்ஸ்ஆப் செயலி சேவை முடங்கியது. இதனால், பயணிகள் டிக்கெட் எடுக்க முடியாமல் அவதி அடைந்தனா்.

இதைத் தொடா்ந்து, சிங்கார சென்னை, மெட்ரோ ரயில் பயணிகள் செயலி உள்ளிட்டவை மூலம் ரயில் டிக்கெட்டுகளை பெறலாம் என்று மெட்ரோ ரயில் நிா்வாகம் அறிவுறுத்தியது.

இதையடுத்து நீண்ட போராட்டத்துக்குப் பின்னா் இந்த கோளாறு சரிசெய்யப்பட்டதைத் தொடா்ந்து, மெட்ரோ ரயில் வாட்ஸ்ஆப் செயலி வழக்கம்போல மீண்டும் செயல்பட தொடங்கியது.

மாநாடுகள் மட்டும் விஜய்க்கு வெற்றியைத் தேடித் தராது: செல்லூா் கே. ராஜூ

முருகன் கோயில்களில் கிருத்திகை வழிபாடு

தமிழகத்தில் நிறையும் குறையும் நிறைந்த ஆட்சி: பிரேமலதா விஜயகாந்த்

திமுக கூட்டணியில் இருந்தாலும் மக்கள் பிரச்னையில் சமரசமில்லை! ஜி. ராமகிருஷ்ணன்

பொன்னமராவதியில் கோகுலாஷ்டமி விழா

SCROLL FOR NEXT