தமிழ்நாடு

பிளஸ் 1 தேர்வு முடிவுகள்: மாவட்ட வாரியாக - முழு விவரம்!

பிளஸ் 1 தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

DIN

பிளஸ் 1 தேர்வில் அரியலூர் மாவட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

  • அரியலூர் - 97.76%

  • ஈரோடு - 96.97%

  • விருதுநகர் - 96.23%

  • கோயம்பத்தூர் - 95.77%

  • தூத்துக்குடி - 95.07%

அரசுப் பள்ளிகளில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்கள்

  • அரியலூர் - 96.94%

  • ஈரோடு - 95.37%

  • நாகை - 93.07%

  • விருதுநகர் - 92.07

  • சிவகங்கை - 91.97%

தேர்வு எழுதிய மொத்த மாணாக்கர்கள் 8,07,098 இதில் 7,43,232 மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 92.09% ஆகும்.

தேர்வு எழுதிய 4,24,610 மாணவிகளில் 4,03,949 மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 95.13% தேர்ச்சி ஆகும்.

தேர்வு எழுதிய 3,82,488 மாணவர்களில் 3,39,283 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 88.70% தேர்ச்சி ஆகும்.

மாணவர்களை விட மாணவிகள் 6.43% தேர்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 0.92% தேர்ச்சி அடைந்துள்ளனர்.

தேர்வு எழுதிய 9,205 மாற்றுத் திறனாளிகளில் 8,460 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 91.91% ஆகும்.

தேர்வு எழுதிய 125 சிறைவாசிகளில் 113 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 90.40% ஆகும்.

தேர்வு எழுதிய 4,326 தனித்தேர்வர்களில் 950 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 21.96% ஆகும்.

100% தேர்ச்சி பெற்ற பள்ளிகள்

பிளஸ் 1 தேர்வு எழுதிய மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 7558

100% தேர்ச்சி பெற்ற மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை - 2,042

100% தேர்ச்சி பெற்ற அரசு மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கை 282

பள்ளி மேலாண்மை வாரியாக தேர்ச்சி

  • அரசுப் பள்ளிகள் - 87.37%

  • அரசு உதவிபெறும் பள்ளிகள் - 93.09%

  • தனியார் சுயநிதிப் பள்ளிகள் - 98.03%

  • இருபாலர் பள்ளிகள் - 92.40%

  • பெண்கள் பள்ளிகள் - 95.02%

  • ஆண்கள் பள்ளிகள் - 83.66%

ஆண்கள் பள்ளிகளை விட பெண்கள் பள்ளிகள் 11.36% கூடுதலாகத் தேர்ச்சி விகிதத்தைக் காட்டியுள்ளன. இருபாலர் பயிலும் பள்ளிகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 8.74% கூடுதலாக தேர்ச்சி அடைந்துள்ளனர்.

பாடப் பிரிவு வாரியாக தேர்ச்சி

  • அறிவியல் பாடப் பிரிவுகள் - 95.08%

  • வணிகவியல் பாடப் பிரிவு - 87.33%

  • கலைப் பிரிவுகள் - 77.94%

  • தொழிற்பாடப் பிரிவுகள் - 78.31%

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தைப்பூசம்: விழுப்புரம், விருத்தாசலத்திலிருந்து கடலூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

கேரள முதல்வர் வேட்பாளராக சசி தரூர்..? ராகுல், கார்கேவுடன் சந்திப்பு!

மகாராஷ்டிர அமைச்சரவையில் அஜீத் பவார் மனைவிக்கு இடம்: வலுக்கும் கோரிக்கை!

ஆஸி. ஓபன்: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சபலென்கா புதிய சாதனை!

கல்வி மாநாட்டில் 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! 11,815 பேருக்கு வேலைவாய்ப்பு!

SCROLL FOR NEXT