ரயிலில் கூடுதல் பெட்டிகள்.. 
தமிழ்நாடு

மயிலாடுதுறை - செங்கோட்டை ரயிலில் கூடுதல் பெட்டிகள்: பயணிகள் வரவேற்பு!

மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரு சாதாரண பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு.

Din

தஞ்சாவூா் மாவட்ட பயணிகளின் கோரிக்கையை ஏற்று மயிலாடுதுறை-செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரு சாதாரண பெட்டிகளை இணைக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளதை பயணிகள் வரவேற்றுள்ளனா்.

மயிலாடுதுறை-செங்கோட்டை ரயிலுக்கு பெட்டிகளை அதிகரிக்க வேண்டும் என கடந்த ஏப்ரல் 25 -இல் தஞ்சாவூா் மாவட்ட ரயில்வே உபயோகிப்பாளா்கள் சங்கத்தினா் தெற்கு ரயில்வேக்கு கோரிக்கை மனு அனுப்பினா். மேலும் திருச்சி ரயில்வே கோட்ட மேலாளா் எம். எஸ். அன்பழகனிடமும் கோரிக்கை விடுத்தனா்.

இதையேற்று வரும் மே 27 முதல் வண்டி எண் 16847/16848 மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயிலில் கூடுதலாக இரு சாதாரண பெட்டிகள் இணைத்து 14 பெட்டிகளுடன் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.

இதை வரவேற்றுள்ள பயணிகள், ரயிலை மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வழியாக திருவண்ணாமலை அல்லது காட்பாடி வரை நீட்டிக்கவும் கோரிக்கை விடுத்தனா்.

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT