திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் பிளஸ்1 பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் 25,547 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதோடு, 3687 பேர் தோல்வி அடைந்த நிலையில், மாநில அளவில் 36 இடம் பிடித்துள்ளதாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மோகனா தெரிவித்தார்.
பிளஸ் 1 தேர்வு முடிவுகளை மாணவர்கள் பிற்பகல் 2 மணிக்குத் தெரிந்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதம் தொடர்பான அறிவிப்புகள் மட்டும் வெளியிடப்பட்டுளள்து.
மாநில அளவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ்1 பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வுக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை காலையில் வெளியானது. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 248 உள்ளடக்கிய 109 தேர்வு மையங்களில் மாணவர்கள் 13,903, மாணவிகள் 15,331 என மொத்தம் 29,234 தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 11,479, மாணவிகள் 14,068 என 25,547 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் மாணவர்கள் 82.56 சதவீதமும், மாணவிகள் 91.76 சதவீதம் என மொத்தம் 87.39 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாநில அளவில் 36 ஆவது இடம் பிடித்துள்ளது. இதுவே கடந்தாண்டில் 85.54 சதவீதம் தேர்ச்சி ஆகும். நிகழாண்டில் 1.85 சதவீதம் அதிகமாகும்.
அதேபோல் நிகழாண்டில் 102 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 6464, மாணவிகள் 7673 என மொத்தம் 14137 பேர் தேர்வு எழுதினார்கள். இதில் மாணவர்கள் 4541, மாணவிகள் 6646 என மொத்தம் 11167 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் மாணவர்கள் 70.25 சதவீதமும், மாணவிகள் 86.62 சதவீதமும் என மொத்தம் 79.13 சதவீதம் ஆகும். இதுவே கடந்தாண்டில் 75.50 சதவீதமாகும்.
மாவட்ட அளவில் 12 அரசு பள்ளிகள் விட 57 பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.