10, 11 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 4 ஆம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் நடைபெற்ற 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் வெளியிட்டார்.
சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி முடிவுகளை வெளியிட்டார்.
அப்போது செய்தியாளர்களுடன் பேசிய அமைச்சர், “10, 11 ஆம் வகுப்புகளுக்கு ஜூலை 4 ஆம் தேதி முதல் துணைத் தேர்வு நடைபெறும். துணைத் தேர்வு அட்டவணை நாளை(மே 17)” வெளியிடப்படும். துணைத் தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை மே 19 ஆம் தேதி முதல் இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.” என்றார்.
10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை வெளியாகியுள்ள நிலையில், 11 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் பிற்பகல் 2 மணிக்கு தெரிந்துகொள்ளலாம்.
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் மாவட்டவாரியான தேர்ச்சி விகிதத்தில் சிவகங்கை முதலிடம் பிடித்துள்ளது. சிவகங்கையில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களில் 98.31% மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிக்க: திட்டமிட்டப்படி ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு: அமைச்சர் அன்பில் மகேஸ்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.