கனிமொழி எம்.பி.  
தமிழ்நாடு

சாத்தான்குளம் விபத்து: கனிமொழி எம்.பி. நேரில் ஆறுதல்

சாத்தான்குளம் அருகே கிணற்றில் ஆம்னி வேன் விழுந்ததில் பலியானோரின் உறவினர்களைச் சந்தித்து கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்தார்.

DIN

சாத்தான்குளம் அருகே கிணற்றில் ஆம்னி வேன் விழுந்ததில் பலியானோரின் உறவினர்களைச் சந்தித்து கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை ஆறுதல் தெரிவித்தார்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே கட்டுப்பாட்டை இழந்த ஆம்னி வேன் சாலையோரம் இருந்த 50 அடி ஆழ கிணற்றுக்குள் சனிக்கிழமை பாய்ந்தது. கிணறு முழுவதும் தண்ணீா் இருந்ததால், காா் முழுவதும் கிணற்றுக்குள் மூழ்கியது. இந்த சம்பவத்தில் ஓட்டுநா் உள்பட 5 போ் நீரில் மூழ்கி பலியாகினா்.

அதில், கொ்சோம், சைனிகிருபா, ஜெரின்எஸ்தா் ஆகியோா் கதவைத் திறந்து நீந்தி வெளியே வந்தனா். சுமாா் 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னா், காா் மற்றும் 5 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் அனைத்தையும் கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு போலீஸாா் அனுப்பி வைத்தனா்.

இலங்கையில் முன்னாள் அதிபரின் உதவியாளர் வாகனம் மீது துப்பாக்கிச்சூடு

இந்த நிலையில் கிணற்றில் ஆம்னி வேன் விழுந்ததில் பலியானோரின் உறவினர்களைச் சந்தித்து கனிமொழி எம்.பி. ஞாயிற்றுக்கிழமை நேரில் ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே உயிரிழந்தவர்களின் உறவினர்கள் அளித்த தகவலின்படி கிணற்றுக்குள் இருந்த 45 சவரன் நகைகள் மற்றும் பொருட்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பஞ்சாபில் சர்வதேச எல்லை அருகே 4 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் பறிமுதல்

அனைத்து தோஷங்களையும் போக்கும் சோழ நாட்டு திருச்செந்தூர்!

ஆக்ரா: குடிபோதையில் பொறியாளர் ஓட்டிச்சென்ற கார் மோதியதில் 5 பேர் பலி

வைட் ஏஞ்சல்... அங்கிதா சர்மா!

தீப ஒளி... ராகினி துவேதி!

SCROLL FOR NEXT