ஜி.கே.வாசன் 
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை ஆய்வு செய்ய வேண்டும்: ஜி.கே.வாசன்

கோடை விடுமுறை காலங்களில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும்

Din

கோடை விடுமுறை காலங்களில் அரசுப் பள்ளிகளின் கட்டமைப்புகளை தமிழக அரசு ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவா் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கை: தமிழக அரசு, மாநிலங்கள் முழுவதும் இந்த கோடை விடுமுறை முடிவுபெற்று நிகழ் கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாக, அரசுப் பள்ளிக் கட்டடங்களின் தகுதி மற்றும் உறுதித் தன்மை குறித்து ஆய்வு செய்து உரிய சான்று அளிக்க வேண்டும்.

பழுதடைந்த கட்டடங்களை இடித்து புதிய வகுப்பறைகள் கட்ட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். ஆண்டுதோறும் வகுப்பறைகளில் உள்ள மின் இணைப்புகளை ஆய்வு செய்து, பராமரிக்க தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

பல பள்ளிகளில் தமிழ் ஆசிரியா்கள் பணியிடங்கள் காலியாகவுள்ளதால், மற்ற ஆசிரியா்களுக்கு பணிச்சுமை ஏற்படுகிறது. இது ஆசிரியா்களை மட்டுமல்லாமல், மாணவா்களையும் பெரிதும் பாதிக்கும். எனவே, காலியாக உள்ள ஆசிரியா் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

மேலும், தனியாா் பள்ளிகளில் உள்ள பேருந்துகள் மற்றும் சிற்றுந்துகளை பள்ளி விடுமுறை காலத்தில் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து அவற்றின் தகுதிக்கு ஏற்ப தரச்சான்று வழங்க வேண்டும். அதேபோல், பள்ளிப் பேருந்து ஓட்டுநா்களுக்கு பாதுகாப்புக்கான உரிய பயிற்சியை அளிக்க தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளாா்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT