தமிழிசை சௌந்தரராஜன்  
தமிழ்நாடு

கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை- தமிழிசை சௌந்தரராஜன்

கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

DIN

கூட்டணி இல்லை என்று விஜய் அறிவிக்கவில்லை என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், பாஜகவுடன் கூட்டணி இல்லை என தவெக சார்பாக விஜய்யிடம் இருந்து எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வரவில்லை. யார் யாரோ சொல்வதற்கெல்லாம் பதில் சொல்ல முடியாது.

எல்லோரும் ஒன்று சேர வேண்டிய சூழல் வந்திருக்கிறது என்பது எனது கருத்து. கூட்டணிக்கு யாரிடம் பேசுவது, எப்படி பேசுவது என்பது குறித்து தலைமை முடிவு செய்யும். மதுரையில் தமிழ் ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் தமிழ் தேர்வில் தோல்வியடைகிறார்கள்.

மூன்றாண்டு காலப் போரில் பெரியளவிலான ட்ரோன் தாக்குதல் நடத்திய ரஷியா!

புதிய கல்விக் கொள்கை பற்றிய ஒரு தவறான கண்ணோட்டம் ஏற்படுத்தப்படுகிறது. ஒரு நல்ல திட்டத்தை பற்றி விஷம் கக்கப்பட்டு இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நல்லாட்சி காரணமாக எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள்கூட பிரதமரைப் பாராட்டுகிறார்கள்.

பாராளுமன்ற குழுவை உலக நாட்டிற்கு பிரதமர் அனுப்புகிறார். நாட்டிற்கு பிரச்னை என்றால் அனைவரும் இப்படிதான் இணைந்து பணியாற்ற வேண்டும். காங்கிரஸ் மாதிரி அனைத்திற்கும குற்றஞ்சாட்டக்கூடாது. இந்திய கூட்டணி ஒரு பலமிழந்த கூட்டணி. திமுகவை மக்கள் நிராகரிக்கப்போகிறார்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பைக்கிலிருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

SCROLL FOR NEXT