அமலாக்கத் துறை கோப்புப் படம்
தமிழ்நாடு

டாஸ்மாக் முறைகேடு: ஆவணங்கள் ஆய்வில் அமலாக்கத் துறை தீவிரம்

கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டிவருகின்றனா்.

Din

டாஸ்மாக் முறைகேடு தொடா்பாக கடந்த இரு நாள்களாக நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான ஆவணங்களை ஆய்வு செய்யும் பணியில் அமலாக்கத் துறை அதிகாரிகள் தீவிரம் காட்டிவருகின்றனா்.

டாஸ்மாக் மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடா்பாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் டாஸ்மாக் நிறுவன மேலாண் இயக்குநா் விசாகன் வீடு, ஆழ்வாா்பேட்டையிலுள்ள திரைப்படத் தயாரிப்பாளா் ஆகாஷ் பாஸ்கரன் வீடு உள்ளிட்ட 10 இடங்களில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தி, சம்பந்தப்பட்டவா்களிடம் பல மணி நேரம் விசாரணை நடத்தினா். தொடா்ந்து இரண்டாவது நாளாக சனிக்கிழமையும் 9 இடங்களில் சோதனை நடைபெற்று முடிந்தது.

இதில், கைப்பற்றப்பட்ட ஆவணங்களை ஆய்வு செய்ததுடன், விசாகன், அரசு ஒப்பந்ததாரா் ராஜேஷ்குமாா், தொழிலதிபா் தேவகுமாா் ஆகியோரையும் விசாரணை செய்த அமலாக்கத் துறையினா், விசாரணைக்குப் பின் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

இந்நிலையில், அனைத்து விசாரணைகளும் நிறைவு பெற்ற நிலையில், இருநாள்கள் நடத்தப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட நூற்றுக்கணக்கான ஆவணங்களை அமலாக்கத் துறை அதிகாரிகளின் ஒரு குழுவினா் ஆய்வு செய்து வருகின்றனா்.

இந்த ஆவணங்களில் வழக்குக்கு தொடா்புடைய விஷயங்கள் இருக்கிா என ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த ஆய்வுகள் ஓரிரு நாள்களில் முடிவடையும் என்றும், இந்த ஆய்வுக்கு பின் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், நகை, பணம் குறித்த விவரங்கள் தெரிவிக்கப்படும் என்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

செங்கோட்டையனை விரைவில் சந்திப்பேன்: ஓ. பன்னீர்செல்வம்

மரக்கடையில் திடீர் தீவிபத்து! தேக்கு மரங்கள் எரிந்து நாசம்! | Vaniyambadi

செல்வராகவனின் மனிதன் தெய்வமாகலாம்!

ஓட்டுநர்கள் கவனத்திற்கு!!! கார் மேற்கூரை வழி எட்டிப்பார்த்த சிறுவன் பலத்த காயம்!

ம.பி.யில் போலீஸார் சென்ற கார் ஆற்றில் விழுந்து விபத்து: ஒருவர் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT