சென்னை, புறநகரில் பரவலாக மழை!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
பிற்பகல் முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
சென்னை வளசரவாக்கம், கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், கோயம்பேடு, அண்ணா நகர், முகப்பேர், போரூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
இதேபோன்று புறநகர் பகுதிகளான அம்பத்தூர், ஆவடி, மாதவரம், பூவிருந்தவல்லி, வானகரம், திருவேற்காடு, கடம்பத்தூர், பேரம்பாக்கம் உள்ளிட்டப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் 5 நாள்களுக்கு இடி மின்னல் மற்றும் சூறைக்காற்றுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் முன்பு அறிவித்திருந்தது.
இதனிடையே சென்னை மட்டுமின்றி திருவள்ளூர், வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களின் ஒருசில பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
இதையும் படிக்க | மின் கட்டண உயர்வு இல்லை, சலுகைகள் தொடரும்: அமைச்சர் சிவசங்கர்