முகப்பு
தமிழ்நாடு

அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் திமுக பாடல்! கொந்தளித்த சிறுத்தைகள்!

புதுக்கோட்டையில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதியின் பாடலுக்கு விசிக எதிர்ப்பு

Updated On : 23 மே, 2025 at 2:35 PM
பகிர்:

புதுக்கோட்டையில் அண்ணல் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவில் துணை முதல்வர் உதயநிதியின் பாடல் ஒலிக்கப்பட்டதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அண்ணல் அம்பேத்கரின் சிலை திறப்பு விழாவில், அவரது பாடல்தான் ஒலிக்க வேண்டும் என்றும், உதயநிதியின் பாடலோ திமுகவின் பாடலோ அனுமதிக்கப்பட மாட்டாது என்று விசிகவினர் கோஷமிட்டனர்.

கூட்டத்தில், கூச்சலில் ஈடுபட்ட விசிகவினரிடம் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

முன்னதாகவே, இந்த சிலை திறப்பு விழாவுக்கு பதாகை வைப்பதற்கு காவல்துறையினர் கடும் மறுப்பு தெரிவித்ததாகவும் அக்கட்சியினர் தெரிவித்தனர்.

முழு கட்டுரையைப் படிக்க →