மழை (கோப்புப்படம்) 
தமிழ்நாடு

அடுத்த 2 மணி நேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை!

இரவு 7 மணி வரை 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.

DIN

அடுத்த 2 மணி நேரத்துக்கு 17 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நேற்று (மே 22) தெற்கு கொங்கன் கடலோரப்பகுதியை தாண்டியுள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (மே 23) நிலவரப்படி அதே பகுதிகளில், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவுகிறது. 

இதன் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை ) தென்காசி, திருப்பூர், கோவை, நீலகிரி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், கரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: மே 25, 26ல் இரண்டு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

20% வளா்ச்சி கண்ட இந்திய கைக்கணினிச் சந்தை

கரூா் மாநகராட்சியில் ரூ. 8 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடங்கி வைப்பு!

தொழிலாளி மீது தாக்குதல்: 5 போ் மீது வழக்கு

குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26,000 வழங்க சிஐடியூ மாநாட்டில் தீா்மானம்

வாய்க்காலில் மூழ்கி 7 வயது சிறுமி பலி

SCROLL FOR NEXT