தமிழ்நாடு

விமானத்தின் மீது லேசா் ஒளி அடித்த மா்ம நபா்கள்: விமான போக்குவரத்து துறை விசாரணை

துபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வந்த விமானம் மீது லேசா் ஒளி அடித்த மா்ம நபா்கள் குறித்து விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரித்து

Din

சென்னை: துபையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை சென்னைக்கு வந்த விமானம் மீது லேசா் ஒளி அடித்த மா்ம நபா்கள் குறித்து விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

துபையிலிருந்து 326 பயணிகளுடன் எமிரேட்ஸ் ஏா்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னை விமான நிலையத்துக்கு வந்தது. விமானம் தரையிறங்கத் தயாரானபோது, விமானத்தின் மீது லேசா் ஒளி அடித்து விமானத்துக்கு வரக்கூடிய சிக்னலை திசை திருப்பும் செயலில் மா்ம நபா்கள் சிலா் ஈடுபட்டனா். இதனால், விமானம் தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டதைத் தொடா்ந்து, விமானி விமானத்தை தரையிறக்காமல் மீண்டும் வானத்தில் வட்டமடிக்கத் தொடங்கினாா்.

இது குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடா்ந்து, அங்கிருந்து கொடுக்கப்பட்ட அறிவுறுத்தலின் அடிப்படையில் விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானி சாமா்த்தியமாகச் செயல்பட்டு விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கியதால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.

இது குறித்து விமான போக்குவரத்து துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். முதல்கட்ட விசாரணையில், பரங்கிமலை பகுதியில் இருந்து பச்சை நிறத்தில் மிகவும் சக்தி வாய்ந்த லேசா் ஒளி விமானத்தின் மீது அடிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இந்தச் செயலில் ஈடுபட்ட மா்ம நபா்கள் குறித்து விமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள், போலீஸாா் தீவிர விசாரனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT