முதல்வர் மு.க. ஸ்டாலின் கோப்புப் படம்
தமிழ்நாடு

இபிஎஸ்ஸுக்கு பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை: மு.க. ஸ்டாலின்

சென்னை கொளத்தூரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேட்டி

DIN

எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் சொல்லி எனது தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது தொகுதியான சென்னை கொளத்தூரில் பல்வேறு முடிவுற்ற திட்டங்களை இன்று(செவ்வாய்க்கிழமை) தொடங்கிவைத்தார்.

கொளத்தூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 22.61 கோடி மதிப்பீட்டில் முதியோர் சிறப்பு இல்லத்தை திறந்து வைத்த அவர், மூத்த குடிமக்களுக்கான 3 உறைவிடங்கள் கட்டுமானப் பணிகளுக்கும் அடிக்கல் நாட்டினார். பொதுத் தேர்வில் சாதனை புரிந்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசுகளை வழங்கினார்.

இதன்பின்னர் கொளத்தூரில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"திமுக ஆட்சியைப் பற்றி குறை சொல்ல எடப்பாடி பழனிசாமிக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் அவர் அரைத்த மாவையே அரைத்துக் கொண்டிருக்கிறார்.

இபிஎஸ்ஸுக்கு பதில் சொல்ல நான் தயாராக இல்லை. அவருக்கு பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள விரும்பவில்லை.

நான் தில்லிக்கு வெள்ளைக் கொடியும் கொண்டு செல்லவில்லை, காவிக் கொடியும் கொண்டு செல்லவில்லை என்று ஏற்கெனவே சொல்லிவிட்டேன்.

கொள்ளையடித்த கட்சியான அதிமுக ஆட்சியில் சாத்தான்குளம், தூத்துக்குடி என ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. எடப்பாடி பழனிசாமி வீம்புக்கென செய்துகொண்டிருக்கிறார்" என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT