பிரேமலதா விஜயகாந்த்.  
தமிழ்நாடு

பொறுமை கடலினும் பெரிது: மாநிலங்களவை சீட் குறித்து பிரேமலதா!

மாநிலங்களவை சீட் குறித்து பிரேமலதா விளக்கம் தொடர்பாக...

DIN

பொறுமை கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, பொறுத்து இருந்து பார்ப்போம் என்று மாநிலங்களவை உறுப்பினர் பதவி குறித்து தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்ததாவது:

முதல்வர் மு. க. ஸ்டாலின் தில்லிப் பயணம் மக்களுக்கு நல்லது நடந்தால் சரி, இருந்தாலும் அவர் பயணம் குறித்து அவர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.

அமலாக்கத்துறையைப் பொறுத்தவரை சோதனை நடக்கிறது என்றால், அதன் பின்னர் என்ன நடவடிக்கை எடுக்கின்றனர் என்பதை அவர்கள் விளக்க வேண்டும். இதில் மக்களுக்கு தெளிவான பார்வை இருக்கிறது என்றார்.

மாநிலங்களவை சீட் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், ”பொறுமை கடலினும் பெரிது, தற்போதுதான் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பொறுத்து இருந்து பார்ப்போம், அடுத்த தேர்தல் நிலைப்பாடு தொடர்பாக ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறும் மாநாட்டில் அறிவிப்போம்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: ஆர்த்திக்கு நடிகர் ரவி மோகன் வக்கீல் நோட்டீஸ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆளுநா் மாளிகை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

‘ஹெச்1பி’ விசா நடைமுறையில் மீண்டும் மாற்றம்: டிரம்ப் நிர்வாகம் அதிரடி

ரஷியாவின் தாக்குதலில்.. மூழ்கியது உக்ரைனின் மிகப் பெரிய கடற்படைக் கப்பல்!

தெலங்கானா வெள்ளம்: 5 பேர் பலி.. 3 பேர் மாயம்! மீட்புப் பணிகள் தீவிரம்!

"RSS! விஜய் எச்சரிக்கையாக இருப்பார் என நம்புகிறேன்!"; திருமா | செய்திகள்: சில வரிகளில் | 28.08.25

SCROLL FOR NEXT