கோப்புப் படம் 
தமிழ்நாடு

பிறை தெரிந்தது! ஜூன் 7 -ல் பக்ரீத் பண்டிகை!

தமிழ்நாட்டில் ஜூன்7 ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

தமிழ்நாட்டில் ஜூன்7ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படும் என தமிழ்நாடு தலைமை காஜி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தலைமை காஜி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஷரியத் அறிவிப்பின்படி,

ஹிஜ்ரி 1446 துல் கஃதா மாதம் 29 ஆம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 28-05-2025 தேதி அன்று மாலை துல் ஹஜ் மாத பிறை சென்னையில் காணப்பட்டது.

ஆகையால் வியாழக்கிழமை ஆங்கில மாதம் 29-05-2025 தேதி அன்று துல் ஹஜ் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது.

ஆகையால் ஈதுல் அத்ஹா (பக்ரீத்) சனிக்கிழமை 07-06-2025 கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை அன்று இஸ்லாமிய பெருமக்கள் சிறப்புத் தொழுகை நடத்தியும், குர்பானி அளித்தும் தங்களின் நன்றியையும் பக்தியையும் வெளிப்படுத்துவார்கள்.

இந்த நாளில் ஏழைகளுக்கு தானம் வழங்குவதும் மிக முக்கியமான கடமையாக திருக்குர்ஆன் வலியுறுத்துகிறது. இதனால், இஸ்லாமியர்கள் மூன்றில் ஒரு பகுதி இறைச்சி, உணவு ஆகியவற்றை தானமாக வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருமணமாகி 10 ஆண்டுகள் நிறைவு; மனைவிக்காக ரோஹித் சர்மாவின் அழகிய இன்ஸ்டாகிராம் பதிவு!

திருவனந்தபுரத்தில் என்டிஏ வெற்றி: ‘வகுப்புவாத சக்திகளின் பக்கம் மக்கள் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’ -கேரள முதல்வர்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

நாடாளுமன்ற தாக்குதல் நினைவு நாள் - புகைப்படங்கள்

அருணாசல்: விபத்து நிகழ்ந்த இடத்தில் இருந்து மேலும் 11 உடல்கள் மீட்பு

SCROLL FOR NEXT