முகப்பு
தமிழ்நாடு

சௌதியில் சிக்கியுள்ள தமிழ்நாடு அரசின் தலைமை காஜி!

தமிழ்நாடு அரசின் தலைமை காஜி மெக்காவில் சிக்கியுள்ளது பற்றி...

Updated On : 2 மார்ச், 2026 at 4:23 PM
தமிழ்நாடு அரசின் தலைமை காஜி என்.பி. உஸ்மான் முஹ்யித்தீன்
பகிர்:
Updated On : 2 மார்ச், 2026 at 3:40 PM

அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் இடையே நடைபெறும் போரால் மெக்கா புனிதப் பயணம் சென்றுள்ள தமிழ்நாடு அரசின் தலைமை காஜி முஃப்தி என்.பி. உஸ்மான் முஹ்யித்தீன் சௌதியில் சிக்கியுள்ளார்.

தலைமை காஜி உஸ்மான் முஹ்யித்தீன், ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வதற்காக பிப்ரவரி 15 ஆம் தேதி சென்னையில் இருந்து மெக்கா சென்றார்.

Updated On : 2 மார்ச், 2026 at 3:52 PM

இந்நிலையில் அவர் மெக்காவில் சிக்கியுள்ளதாகவும் தமிழகத்திற்கு பாதுகாப்பாக திரும்பிவர உதவி கேட்டதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

அதன்படியே தமிழக அரசு சார்பில் அவரை தொடர்புகொண்டு பேசியதாகவும் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவை தொடங்கியவுடன் தலைமை காஜி பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வரப்படுவார் என்றும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் தலைமை காஜியை மீட்க வெளிநாட்டு வாழ் தமிழர் நலத்துறை நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.

Updated On : 2 மார்ச், 2026 at 4:21 PM

போர் பதற்றம்

அணு ஆயுத ஒப்பந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதில், ஈரான் தலைமை மதகுரு கமேனி மற்றும் குடும்பத்தினர் கொல்லப்பட்டதையடுத்து ஈரான் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் மட்டுமின்றி அமெரிக்காவின் நட்பு நாடுகளான பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், சௌதி அரேபியா நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்க - இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரானில் 555 பேர் கொல்லப்பட்டுள்ளதாக ரெட் கிரசண்ட் சொசைட்டி அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.

summary

TN govt chief kazi mufti N.P.Usman Mohideen is being stuck in mecca

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.