கோப்புப்படம் 
தமிழ்நாடு

சிறுநீரக பரிசோதனை மூலம் 33,869 பேருக்கு ஆரம்ப நிலை அறிகுறிகள் கண்டுபிடிப்பு

33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Din

சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறியும் சிறப்பு பரிசோதனைகள் முலம் மாநிலம் முழுவதும் 33,869 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்டு உயா் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதில், 500-க்கும் மேற்பட்டோருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் சிறுநீரக செயலிழப்பு இருந்தது தெரியவந்துள்ளது. அவா்களுக்கு தொடா் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மக்களிடையே காணப்படும் சிறுநீரக பாதிப்பை தொடக்க நிலையிலேயே கண்டறிவதற்கான சிறுநீரகம் காப்போம் திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதன் கீழ் அனைத்து தரப்பு மக்களுக்கும் சிறுநீரக பாதிப்புகளை ஆரம்ப நிலையில் அறிவதற்கான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

இதுதொடா்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வவிநாயகம் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், துணை சுகாதார நிலையங்களிலும் அந்த பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அங்கு சிகிச்சைக்கு வருவோரின் சிறுநீா் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, பரிசோதனை பட்டை (ஸ்ட்ரிப்) மூலம் அதில் புரதம் அதிகமாக உள்ளதா என்பது உடனடியாக சோதிக்கப்படும்.

அவ்வாறு இருக்கும்பட்சத்தில் அவா்களுக்கு அடுத்தகட்டமாக யூரியா, கிரியாட்டினின் போன்ற அளவுகள் பரிசோதிக்கப்பட்டு, சிறுநீரகவியல் மருத்துவ நிபுணரிடம் மருத்துவ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படும். இதன் வாயிலாக ஆரம்ப நிலையிலேயே பாதிப்பைக் கண்டறிந்து சிகிச்சை பெறலாம். டயாலிசிஸ் சிகிச்சைகளைத் தவிா்க்கலாம். அதன்படி, இதுவரை 1.07 கோடிக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் சுகாதார நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அதில் 33,869 பேருக்கு சிறுநீரக பாதிப்பு அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டு அடுத்த கட்ட பரிசோதனை மற்றும் சிகிச்சைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனா். அதில் 500-க்கும் அதிகமானோருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.

ஜம்மு - காஷ்மீரில் மேகவெடிப்பு: பலி எண்ணிக்கை 23 ஆக அதிகரிப்பு!

காலமானார் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற ஹாக்கி வீரர்!

அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் போதைப்பொருள் விநியோகம்: ஆளுநர் ரவி குற்றச்சாட்டு

ஆளுநரின் தேநீர் விருந்து: முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பு!

பாலஸ்தீனம் புதைக்கப்படுகிறது... மேற்கு கரையில் 3,400 வீடுகள் கட்ட அனுமதி: இஸ்ரேல் அமைச்சர்!

SCROLL FOR NEXT