முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை, 6 மாவட்டங்களில் மழை!

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்துக்கு சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.

Updated On : 3 நவம்பர், 2025 at 12:58 PM
கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்துக்கு 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்துக்கு (இரவு 8 மணி வரை) செங்கல்பட்டு மாவட்டத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ஒரு வார இடைவெளிக்குப் பின் சென்னையில் திடீர் கனமழை: வெய்யிலின் தாக்கம் குறைந்தது!

summary

rain chance for 7 districts of tamilnadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.