பாலியல் வன்கொடுமை பிரதிப் படம்
தமிழ்நாடு

கோவை விமான நிலையம் அருகே மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை!

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது பற்றி...

இணையதளச் செய்திப் பிரிவு

கோவை விமான நிலையம் அருகே சட்டக் கல்லூரி மாணவியை ஞாயிற்றுக்கிழமை இரவு மூன்று பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் மர்ம நபர்கள் மூன்று பேரைத் தேடி வருகின்றனர்.

கோவை சித்ரா பகுதியில் சர்வதேச விமான நிலையம் பின்புறம் உள்ள காலியிடத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில் சட்டக் கல்லூரியில் பயிலும் மாணவி அவரது ஆண் நண்பருடன் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத மூன்று பேர், காரின் கண்ணாடியை உடைத்து ஆண் நண்பரைத் தாக்கி மயக்கமடையச் செய்துவிட்டு, மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

மயக்க நிலையில் காவல்துறையினர் ஆண் நண்பர் தகவல் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த பீளமேடு காவல்துறையினர் மாணவி மற்றும் அவரது நண்பரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இதையடுத்து அடையாளம் தெரியாத மூன்று பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்த கோவை காவல்துறையினர், 7 தனிப்படைகள் அமைத்து அவர்களை தேடி வருகின்றனர்.

Student gang-raped near Coimbatore airport

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யமுனை பாதுகாப்பு: மாணவா்களிடம் ஆலோசனை கோரிய பாஜக தலைவா்

ரூ.3 கோடி கையாடல்: கூட்டுறவு சங்கச் செயலா் கைது

பட்டினமருதூரில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான சுடுமண் பெண் தெய்வம் கண்டெடுப்பு

ரயிலில் இருந்து தவறி விழுந்து மகாராஷ்டிர வேளாண் அதிகாரி உயிரிழப்பு

தூத்துக்குடியில் அகில இந்திய கூடைப்பந்து போட்டி: சென்னை, பெங்களூரு அணிகள் முதலிடம்

SCROLL FOR NEXT