துணை முதல்வர் உதயநிதி Center-Center-Chennai
தமிழ்நாடு

சுய உதவிக் குழு மகளிருக்கு மேலும் ஒரு அதிரடி சலுகை: உதயநிதி அறிவித்தார்

சுய உதவிக் குழு அடையாள அட்டையைக் காண்பித்து பேருந்துகளில் 100 கி.மீ. பயணிக்கும் ஒரு அதிரடி சலுகையை உதயநிதி அறிவித்தார்

இணையதளச் செய்திப் பிரிவு

வேலூர்: மகளிர் சுய உதவிக் குழுவினர் தங்களுடைய அடையாள அட்டைகளை பயன்படுத்தி பேருந்துகளில் கட்டணமில்லாமல் தாங்கள் தயாரித்த பொருள்களை 100 கிலோமீட்டர் தொலைவிற்கு எடுத்துச் சென்று விற்பனை செய்யலாம் என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

வேலூர் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ரூ18 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், சுமார் ரூ 12 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளுக்கு திறந்து வைத்தும் பல்வேறு அரசு துறைகளின் சார்பில், 49 ஆயிரம் பயனாளிகளுக்கு 415 கோடி மதிப்பீட்டில் நல திட்ட உதவி அரசின் நல திட்ட உதவிகளை வழங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய உதயநிதி ஸ்டாலின், வேலூர் மாவட்டம் மிகவும் புகழ்பெற்ற மாவட்டம் வேலூர் கோட்டையில் ஜலகண்டேஸ்வரர் ஆலயம் கிறிஸ்துவ ஆலயம் மற்றும் மசூதி ஆகியவை இருப்பதால் வேலூர் கோட்டை உலக அளவில் புகழ் பெற்றது.

கோட்டை மட்டுமல்லாது வேலூர் மக்களும் மதசார்பின்மையற்றவர்களாக உள்ளனர். இதே போல் இந்தியா முழுவதும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.

2021 ஆம் ஆண்டு முதலமைச்சர் பொறுப்பு ஏற்றதும் மகளிர்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தனியாக பல சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

மகளிர் விடியல் பயணம் மூலம் 820 கோடி முறை பேருந்துகளில் பயணம் நடை மேற்கொண்டு உள்ளனர். காலை உணவு திட்டத்தின் கீழ் 20 லட்சம் குழந்தைகள் பயன் பெற்றுள்ளனர். இதை பின்பற்றி பஞ்சாப் முதல்வர் தன்னுடைய மாநிலத்திலும் நடைமுறைப்படுத்த இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதேபோல் தமிழ் புதல்வன், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் 8 லட்சம் மாணவ மாணவிகள் பயனடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தைப் பார்த்து தெலுங்கானா முதலமைச்சரும் தன்னுடைய மாநிலத்தில் நிறைவேற்ற இருப்பதாக கூறி உள்ளார்.

எனவே தமிழகத்தில் நிறைவேற்றப்படும் பல திட்டங்கள் பிற மாநிலங்களிலும் நிறைவேற்றக்கூடிய வகையில் முன்னோடி திட்டங்களை தமிழக முதலமைச்சர் செயல் படுத்திவருகிறார்.

மேலும் தமிழகத்தில் 19 லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனைபட்ட வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முதன் முறையாக மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டை பயன்படுத்தி தமிழக முழுவதும் பேருந்துகளில் சுமார் 100 கிலோ மீட்டர் தொலைவிற்கு 25 கிலோ எடை உள்ள மகளிர் தயாரித்த பொருட்களை எடுத்து சென்று விற்பனை செய்யலாம் என்று அவர் கூறினார்

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலட்சுமி மற்றும் சட்டமன்ற, நாடாளுமன்ற, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உடற்பயிற்சியின்போது வலியால் துடித்த மின்னல் முரளி பட நடிகை!

அஜித்தைச் சந்தித்த அனிருத்!

அரசியல், அமைப்பு, சமூகத்தை கட்டமைக்கும் கருவி இலக்கியம்: அமைச்சர் கோவி. செழியன்

தமிழகத்தில் என்றுமே கூட்டணி ஆட்சி இல்லை: அமைச்சர் ஐ. பெரியசாமி

மேற்கு வங்கத்தில் எதிர்க்கட்சித் தலைவர் மீது தாக்குதல்: பாஜவினர் பல்வேறு இடங்களில் போராட்டம்

SCROLL FOR NEXT