நீதிமன்றம் உத்தரவு 
தமிழ்நாடு

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம் என உயர் நீதிமன்றம் கருத்து

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை: சந்தன கடத்தல் வீரப்பன் தேடுதல் வேட்டையின்போது அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு நிலுவைத் தொகையை வழங்குவது தொடர்பான வழக்கில், இந்த தொகை அரசு பணம் அல்ல, மக்கள் பணம், மக்கள் பணத்துக்கு அரசு அறங்காவலர்தான் என்று உயர் நீதிமன்றம் கருத்துத் தெரிவித்துள்ளது.

நிலுவை இழப்பீட்டுத் தொகை உடனடியாக வழங்க மனித உரிமைகள் ஆணையம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அரசுத் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நிலுவை இழப்பீட்டுத் தொகையை உடனே விடுவிக்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், பாதிக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவது அரசின் கடமை. நிலுவைத் தொகையை வழங்க உத்தரவிட்டு ஓராண்டாகியும், தீர்ப்பை அமல்படுத்தாது நீதிமன்ற அவமதிப்பாகும். சம்பந்தப்பட்ட அதிகரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முகாந்திரம் உள்ளது. பாக்கி இழப்பீட்டு தொகை வழங்கியது குறித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவிட்டனர்.

மேலும், இழப்பீடு வழங்குவதை எதிர்த்து நீதிமன்த்தில் அரசு மேல்முறையீடு செய்தது குறித்து நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்ததோடு, இழப்பீடு தொகை மக்களின் பணம்; அரசு பணம் அல்ல, மக்களின் பணத்துக்கு அரசு அறங்காவலர் மட்டுமே என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தன மரக்கடத்தலில் ஈடுபட்ட வீரப்பனை தேடும் பணியில் ஈடுபட்ட தமிழக - கா்நாடக அதிரடிப்படையினா் விசாரணை என்ற பெயரில் மலைக் கிராம மக்கள் மீது மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாா்கள் குறித்து தேசிய மனித உரிமை ஆணையம் விசாரித்தது. அதன்படி, அதிரடிப்படை போலீஸாரால் பாதிக்கப்பட்ட மலைக்கிராம மக்களுக்கு ரூ. 5 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது.

ஆனால் தமிழக அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,20,50,000 மட்டும் இழப்பீடாக வழங்கியது. நிலுவைத் தொகை ரூ. 3,79,50,000 வழங்கவில்லை. இந்தத் தொகையையும் வழங்க வேண்டுமென தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிா்த்து தமிழக அரசு தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT