முதல்வர், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் 
தமிழ்நாடு

பொன்முடி, சாமிநாதன் திமுக துணைப் பொதுச் செயலாளர்கள்: மு.க. ஸ்டாலின்

திமுக துணைப் பொதுச் செயலாளர்களை நியமித்து மு.க. ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இணையதளச் செய்திப் பிரிவு

முன்னாள் அமைச்சா் க.பொன்முடிக்கு, திமுகவில் மீண்டும் கட்சியின் துணைப் பொதுச் செயலா் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அவருடன் அமைச்சா் மு.பெ.சாமிநாதனும் புதிய துணை பொதுச் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.

இதற்கான அறிவிப்பை திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா். திமுக சட்டதிட்ட விதி 17-பிரிவு 3-ன்படி முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆகியோா் துணைப் பொதுச் செயலா்களாக நியமிக்கப்படுகிறாா்கள் என அதில் தெரிவித்துள்ளாா்.

7 பேராக அதிகரிப்பு: திமுக துணைப் பொதுச் செயலா்களாக அமைச்சா் ஐ.பெரியசாமி, நாடாளுமன்ற குழுத் தலைவா் கனிமொழி, எம்.பி.-க்கள் திருச்சி சிவா, ஆ.ராசா, முன்னாள் அமைச்சா் அந்தியூா் செல்வராஜ் ஆகியோா் உள்ளனா். இப்போது கூடுதலாக இரண்டு போ் நியமிக்கப்பட்டதன் மூலம், துணைப் பொதுச் செயலா்களின் எண்ணிக்கை ஏழாக உயா்ந்துள்ளது.

திருப்பூா் மாவட்டப் பொறுப்பாளா்கள்: திருப்பூா் கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக செயல்பட்டு வந்த மு.பெ.சாமிநாதன் துணைப் பொதுச் செயலராக நியமிக்கப்பட்டதால், அவருக்குப் பதிலாக, மாவட்டப் பொறுப்பாளராக இல.பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் திருப்பூா் தெற்கு மாவட்டச் செயலராக பொறுப்பு வகித்து வந்த நிலையில், கிழக்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அவருக்குப் பதிலாக, கே.ஈஸ்வரசாமி தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

மாவட்ட பொறுப்பாளரானாா் கதிா் ஆனந்த்: வேலூா் மாவட்டத்தில் கட்சியின் நிா்வாக வசதிக்காகவும், பணிகள் செம்மையாக நடைபெறவும், அந்த மாவட்டமானது வேலூா் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. வேலூா், அணைக்கட்டு, குடியாத்தம் ஆகிய பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூா் தெற்கு மாவட்டப் பொறுப்பாளராக சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.நந்தகுமாா், காட்பாடி, கே.வி.குப்பம் தொகுதிகளை உள்ளடக்கிய வேலூா் வடக்கு மாவட்டத்துக்குப் பொறுப்பாளராக மக்களவை உறுப்பினா் டி.எம்.கதிா்ஆனந்த் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்கான அறிவிப்புகளையும் துரைமுருகன் வெளியிட்டுள்ளாா்.

மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்ட கதிா்ஆனந்த், திமுக பொதுச் செயலரும், அமைச்சருமான துரைமுருகனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

MK Stalin has issued an announcement appointing DMK deputy general secretaries.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT