இரவில் சென்னை, 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!
தமிழ்நாட்டில் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.
தமிழ்நாட்டில் சென்னை உள்பட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
மேலும், நாகை, வேலூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | சிறப்பு தீவிர திருத்தம்: ஆரம்ப நிலையிலேயே தோல்வி - இந்திய கம்யூ.,
summary