தம்மம்பட்டி சிவன்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி நடைபெற்ற அன்னாபிஷேக விழா  
தமிழ்நாடு

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழாவிற்கு 5 ஆயிரம் பக்தர்கள் திரண்டனர்...

இணையதளச் செய்திப் பிரிவு

தம்மம்பட்டி சிவன்கோவிலில் ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி நடைபெற்ற அன்னாபிஷேக விழாவிற்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் திரளாக பங்கேற்று வழிபாடு செய்தனர்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி காசி ஸ்ரீ விசாலாட்சி உடனுறை காசி ஸ்ரீ விஸ்வநாதர் திருக்கோவிலில் அன்னாபிஷேக விழாவிற்கு மூலவருக்கு 300 கிலோ அரிசியில் சாதம் தயார் செய்து சிவனுக்கு அன்னாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழாவில் தம்மம்பட்டி ஊர் பொதுமக்கள் தாமாக முன்வந்து 320 கிலோ அரிசி, அதற்குண்டான மளிகை சாமான்கள், காய்கறிகளை கோவிலுக்கு வந்து அன்பளிப்பாக வழங்கினர்.

மூலவர் காசி விஸ்வநாதருக்கு அரிசி சாதம் மற்றும் காய்கறிகளால் சிறப்பு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடைபெற்றது. கோவிலின் மண்டபத்தில் அரிசி சாதத்தில் சிவ உருவம் வடிவமைக்கப்பட்டது. உடன் காய்கறிகளால் ஆன அம்பாளான ஸ்ரீ சாகம்பரியாக வடிவமைக்கப்பட்டது.

காய்கறிகள் மற்றும் சாதத்தால் வடிவமைக்கப்பட்ட மூலவர், மற்றும் சாகம்பரியுடன் கூடிய சிவலிங்கத்தை காண பக்தர்கள் திரளாக வந்திருந்து கண்டு வழிபாடு செய்தனர்.

சாகம்பரி அன்னையை அன்னாபிஷேக தினத்தில் வழிபாடு செய்தால் ஆண்டு முழுவதும் மக்களுக்கு உணவுப்பஞ்சம் இருக்காது என்பது ஐதீகம். அதனைத் தொடர்ந்து தம்மம்பட்டி சிவன்கோவிலில் சாகம்பரி அன்னை வடிவமைக்கப்பட்டது.

அன்னாபிசேகத்திற்கு பயன்படுத்தப்பட்ட சாதத்தை 320 கிலோ அரிசி சாதத்துடன் கலந்து பக்தர்கள் சாம்பார், ரசம், பொரியலுடன் பிரசாதமாக வழங்கப்பட்டது.

இவ்விழாவில் தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி, உலிபுரம், நாகியம்பட்டி, ஜங்கமசமுத்திரம், சேரடி, பிள்ளையார்மதி, மண்மலை, பச்சமலை, திருச்சி மாவட்டம் மங்கப்பட்டி, முருங்கப்பட்டி, பாதர்பேட்டை, நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு, மெட்டாலா, முள்ளுக்குறிச்சி உள்ளிட்ட ஊர்களிலிருந்து சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திரளாக வந்திருந்து வழிபாடு செய்து, அன்னாபிஷேக பிரசாதத்தை உண்டு மகிழ்ந்தனர்.

அன்னாபிஷேக பிரசாதத்தை சாப்பிடுவதால் அவரவர் வீடுகளில் உணவிற்கு பஞ்சம் வராது என்பதால் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

இதையும் படிக்க | ஆயிரம் கிலோ அன்னம்! தஞ்சை பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம்!!

Annabhishekam ceremony at Dhammampatti Shiva Temple

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காய்ச்சலுக்கு சிறுமி உயிரிழப்பு

‘ஜிஎஸ்டி சீா்திருத்தத்தால் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிப்பு’

விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

கடையம் அருகே தம்பியை தாக்கியதாக அண்ணன் கைது

கேளையாப்பிள்ளையூரில் ரூ. 68 லட்சத்தில் புதிய வகுப்பறைகள் திறப்பு

SCROLL FOR NEXT