கோப்புப்படம் ENS
தமிழ்நாடு

சென்னை, 26 மாவட்டங்களில் இன்று மழை! நவம்பர் இறுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை?

தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல்...

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை உள்பட 27 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும் நவம்பர் மாத இறுதி வாரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகலாம் என்றும் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் சமுக ஊடகப் பக்கத்தில்,

"வடகிழக்கு பருவமழையின்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால் மழை பெய்யும் சூழ்நிலையில் தற்போது மழைக்காக வெப்பத்தை நம்பியிருக்கிறோம்.

கடந்த 2 நாட்களாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் காலை கடுமையான வெயிலுக்குப் பிறகு மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

இந்த மழை சில இடங்களில் லேசாகவும் சில இடங்களில் தீவிரமாகவும் இருக்கும். சில இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு கனமழை பெய்யும்.

இன்றும் பல மாவட்டங்களில் வெப்பத்தால் மழை பெய்யும்.

டெல்டாவில் (நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சி, காரைக்கால்), திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, நாமக்கல், சேலம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

பெங்களூரிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோயம்புத்தூர், நீலகிரியில் சில இடங்களில் மழை பெய்யும்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அடுத்த 3 நாள்களில் ஆங்காங்கே இடியுடன் கூடிய மழை பெய்யும், அதன் பிறகு மழைக்கு இடைவேளை.

நவம்பர் இறுதி வாரத்தில் வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்படலாம், இருப்பினும் நவம்பர் மாத மழை இயல்பைவிடக் குறைவாகவே இருக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Rain in 27 districts including Chennai today

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரசன் தரமாக இருக்கும்: கவின்

என்றும் என் கைகளில்..! ஹர்மன்ப்ரீத், ஸ்மிருதி மந்தனாவின் ‘ஸ்பெஷல்’ டாட்டூ!

சாலேட் ஹோட்டல் ஒருங்கிணைந்த லாபம் ரூ.154.81 கோடி!

2026ல் திமுக - தவெக இடையே மட்டும்தான் போட்டி: விஜய்

பிக் பாஸ் 9 பிராங்க்: முகத்திரை கிழிந்த போட்டியாளர்கள் - உள்ளத்தால் உயர்ந்த வினோத்!

SCROLL FOR NEXT