தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில், அக்கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியவுடன் கரூர் கூட்ட நெரிசலில் பலியான 41 பேருக்கு தவெக நிர்வாகிகள் எழுந்து நின்று மெளன அஞ்சலி செலுத்தினர்.
தவெக தலைவர் விஜய் தலைமையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 2,000 -க்கும் அதிகமானோர் கலந்துகொண்டுள்ளனர்.
கரூர் சம்பவத்துக்குப் பிறகு, விஜய் எந்தவொரு பொது நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாமல் இருந்த நிலையில், இன்று சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்தக் கூட்டத்தில், தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்படுவதுடன் தீர்மானங்களும் நிறைவேற்றப்படவிருக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.