தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி குறித்து முடிவெடுக்க தவெக தலைவர் விஜய்க்கு அதிகாரம் உள்பட 12 தீர்மானங்கள் கட்சி பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்டன.
அவற்றில் குறிப்பிடத்தக்கவையாக,
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரத்தின்போது, தமிழக அரசால் திட்டமிட்டு பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் கற்பனைக்கடங்காத குளறுபடிகள் என எண்ணற்ற அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்.
சட்டம், ஒழுங்கு மற்றும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறும் திமுக அரசுக்கு கண்டனம்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம்.
வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் கைவிட்டு, ஏற்கனவே உள்ள நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தின் பிரசாரம் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு, தமிழக அரசு பாகுபாடின்றி பாதுகாப்பு வழங்க வேண்டும்.
முதல்வரின் வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் ஈர்க்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் அதனால் உருவான வேலை வாய்ப்புகள் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மழைநீர் வடிகால் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் உடனடியாக முடித்து, மழை வெள்ளத்திலிருந்து மக்களை அரசு பாதுகாக்க வேண்டும்.
தவெக தலைவர் விஜய் தலைமையில் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம், மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் என 2,000 -க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
மேலும், கூட்டத்தின் தொடக்கத்தில், கரூர் சம்பவத்தில் பலியானோருக்கு 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் தேர்தலுக்கான வியூகங்கள் வகுக்கப்படும் நிலையில், தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.
இதன்படி, தமிழகத்தில் அடுத்தாண்டு பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலில் தவெக போட்டியிடும் என்று அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: நாலரை மணி நேரம், 100 காவலர்கள்... மாணவியைக் கண்டுபிடிக்காதது ஏன்? இபிஎஸ் கேள்வி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.