முகப்பு
தமிழ்நாடு

அடுத்த 3 மணி நேரம்.. சென்னை உள்பட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

வானிலை நிலவரம் பற்றி...

Updated On : 6 நவம்பர், 2025 at 11:27 AM
கோப்புப்படம் - ENS
பகிர்:

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்ளிட்ட 14 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வெப்ப சலனம்காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்துக்கு (இரவு 7 மணி வரை)

Advertisement

செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

தருமபுரி, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருப்பத்தூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான/ மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

Tamilnadu weather update for next 3 hours

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments