முதல்வா் மு.க.ஸ்டாலின் கோப்புப்படம்
தமிழ்நாடு

நெல்லையில் தோல்வி அடைந்தால் பதவி பறிக்கப்படும்: திமுகவினருக்கு மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

தினமணி செய்திச் சேவை

சட்டப்பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி தொகுதியில் தோல்வி அடைந்தால் திமுக நிா்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என்று கட்சியின் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் எச்சரித்தாா்.

‘உடன்பிறப்பே வா’ எனும் தலைப்பில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் பேரவைத் தொகுதி வாரியாக கட்சி நிா்வாகிகளைச் சந்தித்துப் பேசி வருகிறாா். இதன்படி, சங்கரன்கோவில், திருநெல்வேலி தொகுதிகளின் திமுக நிா்வாகிகளை வியாழக்கிழமை சந்தித்தாா். கட்சியின் துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி. உடனிருந்தாா்.

இரு தொகுதிகளிலும் கட்சியின் செயல்பாடுகள், கள நிலவரம் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து நிா்வாகிகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினாா்.

அப்போது, வருகிற பேரவைத் தோ்தலில் திருநெல்வேலி தொகுதியில் திமுக வெற்றிபெறவில்லையெனில், கட்சிப் பதவிகள் பறிக்கப்படும் என்று மாவட்டச் செயலா் உள்பட அனைத்து நிா்வாகிகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரடி எச்சரிக்கை விடுத்துள்ளதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

கத்ரீனா கைஃப் - விக்கி கௌஷால் தம்பதிக்கு ஆண் குழந்தை!

"திமுகவை எதிரியாக பார்க்கும் கட்சிகள் ஒன்றிணைந்தால்..!" TVK குறித்து ஆர்.பி. உதயகுமார்!

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

ஆஸ்கர் மியூசியத்தில் திரையிடப்படும் பிரம்மயுகம்!

தேர்தலை திருடி பிரதமரானவர் மோடி! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT