முதல்வர் ஸ்டாலின் புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இரண்டு நாள் பயணமாக செல்கிறார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை(நவ. 10) காலை 11 மணியளவில் ரூ.767 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்றப் பணிகளைத் திறந்து வைத்து, நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார்.
திருச்சி மாநகரில் ரூ.10 கோடியில் மூத்த குடிமக்களின் நல்வாழ்வை மேம்படுத்திட 25 முதியோர் மனமகிழ் வளமையம் அன்புச்சோலை திட்டத்தைத் தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின், அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கள ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில், இரண்டு நாள் பயணமாக புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்றிரவே திருச்சிக்கு செல்கிறார்.
மூத்த குடிமக்களின் முழுமையான பராமரிப்புக்காக திருச்சி மாவட்டத்தில் கொட்டப்பட்டு, பொன்மலைப்பட்டி எம்ஜிஆர் நகர் ஆகிய 2 இடங்களில் தொண்டு நிறுவனங்கள் துணையுடன் 2 அன்புச் சோலை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களை திறந்து வைக்கவும், ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ எம். பழனியாண்டி இல்ல திருமண விழாவை நடத்தி வைக்கவும் திருச்சிக்கு செல்கிறார்.
டிவிஎஸ் சோதனைச் சாவடி பகுதியில் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சுற்றுலா மாளிகையில், இன்று இரவு தங்கி ஓய்வெடுக்கிறாா். திங்கள்கிழமை காலை (நவ.10) எம்எல்ஏ இல்ல திருமண விழாவுக்கு செல்கிறார். இதைத் தொடா்ந்து, சாலை வழியாக புதுக்கோட்டை மாவட்டத்துக்குச் செல்கிறார்.
கீரனூா் அருகேயுள்ள களமாவூா் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவுற்ற திட்டப் பணிகளையும் தொடங்கி வைக்கிறார்.
பின்னா், மீண்டும் திருச்சிக்கு வரும் முதல்வர், கொட்டப்பட்டு பகுதியில் நடைபெறும் விழாவில், அன்புச்சோலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்டத்தில் 2 நாள்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மத்திய சிறைக்குள் பயங்கவரவாத கைதிகளுக்கு மொபைல், தொலைக்காட்சி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.